பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது

இந்திய பிரதமர் மோடி 5 நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், கானா நாட்டுக்கு சென்றார். பிரேசில் நாட்டில் நடக்கும் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி, கானா, டிரினிடாட் அண்ட் டுபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு ஒரு வார கால பயணமாக செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

குறித்த பயணத்தை அவர் நேற்று ஆரம்பித்தார். டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், அவர் கானா நாட்டைச் சென்றடைந்தார். கானா ஜனாதிபதி ஜான் டிரமனி மஹாமா அழைப்பின்பேரில் அவர் சென்றுள்ளார். கோடகா விமான நிலையத்தில் மோடிக்கு இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் பிரதமர் மோடியை ஜனாதிபதி ஜான் டிரமனி மஹாமா கைக்குலுக்கி வரவேற்றார். கானாவில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆபிஸ் ஆட் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா விருது அளித்து கௌரவிக்கப்பட்டது. கானா ஜனாதிபதி ஜான் தர்மனி மஹாவாவிடம் இருந்து இந்த விருதை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.

Exit mobile version