யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தைக்கு நேற்றையதினம் காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் தாயார் குழந்தைக்கு திரவ மருந்து கொடுத்துள்ளார்.
இன்றையதினம் காலை குழந்தை அழுதுவிட்டு மயக்கமடைந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.