நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று (08) இடம்பெறுகிறது.

அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற்று (1-1) என்ற சமநிலையில் இரு அணிகளும் உள்ளன.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

Exit mobile version