ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான நிலநடுக்கம்

இந்தியாவின் டெல்லியில் இன்று (10) காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இந்த நிலநடுக்கமானது அரியானாவின் குராவாரா பகுதியில் மையம் கொண்டிருந்ததாக இந்திய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், அது மிகவும் பயமாகவும் வலுவாக இருந்ததாகவும் டெல்லியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version