கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண நேற்று (11) தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் தலைவராக அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அதனை வழிமொழிந்தார்.

அத்துடன், ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ருவான் மாபலகம, துஷாரி ஜயசிங்க, சுசந்த தொடாவத்த, சுகத் வசந்த த சில்வா மற்றும் நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Exit mobile version