சிறைச்சாலைக்குள் இருந்து தொலைபேசிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பூஸ்ஸ சிறைச்சாலையில் தொலைபேசிகளை சுதந்திரமாகப் பயன்படுத்தி குற்றங்களை நடத்தும் மையமாக மாற்றும் நோக்கில் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
மனுதாரர் இந்த மனுவை சுத்தமான கரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்பதாலும், அதை பரிசீலிக்க நியாயமான சட்ட அடிப்படை இல்லாததாலும், மனுவை விரைவில் தள்ளுபடி செய்யுமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷானில் குலரத்ன நீதிமன்றத்தில் கோரினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை ஓகஸ்ட் 25 ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு இரு தரப்பினரின் சட்டத்தரணிகளுக்கும் உத்தரவிட்டது.
மேலும், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா? என்பது தொடர்பான உத்தரவை செப்டம்பர் 1 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.