1978 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்த டான் திரைப்படத்தை இயக்கியவர் சந்திரா பரோட். இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்துள்ளனர்.
86 வயது ஆகும் சந்திரா ப்ரோட் கடந்த 7 ஆண்டுகளாக நுரையீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (20) மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார்.
இவரது மறைவு இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவரது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவர் இயக்கிய டான் திரைப்படத்தை தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் பில்லா திரைப்படமாக உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.