பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பெலியத்த பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பேருந்து வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் மோதி நின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது, 13 பாடசாலை மாணவர்கள் பெலியத்த, பெலிகல்ல, தங்காலை மற்றும் வீரகெட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version