டுபாயில் தங்கியிருந்து இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்பை நடத்தும் ‘பஸ் லலியா’ எனப்படும் லலித் கன்னங்கரவின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை ஹங்வெல்ல மோட்டார் சைக்கிள் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகரான நுவன் திலகரத்ன உள்ளிட்ட குழுவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்ட போது, பொலிஸாரின் வீதி தடைகளை தவிர்த்து தப்பிச் செல்ல முயன்றபோது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 7 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.