இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் போராட்டம்

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் இன்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டும் நீதியை வேண்டி நிற்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version