காமெடி லெஜண்ட்டாக திகழ்ந்து வந்த வடிவேலு, விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதல், ரெட் கார்ட் என்று பல பிரச்சனைகளில் சந்தித்து தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
தற்போது மாரீசன் படத்தில் நடிகர் பகத் ஃபாசிலுடன் இணைந்து நடித்துள்ளார்.
இப்படம் ரிலீஸாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இயக்குநர் வி சேகர் அளித்த பேட்டியொன்றில் வடிவேலு பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், நான் இயக்கிய ஒரு படத்தில் வடிவேலுவுடன் நடிகை கோவை சரளாவை ஜோடியாக வைத்து கமிட் செய்தேன். அந்த படத்தின் ஷூடிங்கின்போது என்னிடம் வந்த வடிவேலு, எதற்காக எனக்கும் சரளாவுக்கும் தனித்தனி மேக்கப் ரூம் போட வேண்டும்.
ஒரே ரூமாக போடுங்கள், உங்களுக்கு செலவு மிச்சமாகும், பட்ஜெட்டும் கட்டுக்குள் இருக்கும் என்று சொன்னார். உடனே நானோ, நமக்கு எவ்வளவு நல்லது செய்கிறார் என்று நினைத்தேன். அவர்கள் ஒரே ரூமுக்குள் போனதும் கதவை சாத்திக்கொண்டு திறக்கவே இல்லை.
எனது உதவி இயக்குநர் ஒருவர் வந்து, சார் அவர்கள் கதவையே திறக்கமாட்டேன் என்கிறார்கள். நீண்ட நேரம் தட்டி பார்த்துவிட்டேன் என்று கூறினார். எனக்கு டென்ஷனாகி இந்த படத்தில் சரளாவுக்கு ஜோடியாக நடிக்க தேவையில்லை என்று சொல்லி துரத்திவிட்டேன் என்று வி சேகர் தெரிவித்துள்ளார்.