துறைமுக அதிகாரசபை ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த கொடுப்பனவு 60,000. ரூபாவினால் அதிகரிக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் கொடுப்பனவு 160,000 ரூபாவக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிர்வாக இயக்குநர் பொறியாளர் கனக ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வருடம் வழங்கப்படவுள்ள 160,000 ரூபா கொடுப்பனவு ஏப்ரல் மாதத்தில் 80,000 ரூபாவாகவும், மீதமுள்ள 80,000 ரூபாய் டிசம்பர் மாதத்தில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், துறைமுக அதிகாரசபையினால் ஈட்டப்படும் லாபத்தில் 5 பில்லியன் ரூபாய் சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
துறைமுக அதிகாரசபை ஊழியர்களில் 90 சதவீதத்தினரின் மாதச் சம்பளம் 3அல்லது 4 இலட்சத்திற்கும் அதிகமாக காணப்பட்டது.
ஒரு சராசரி தொழிலாளி மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுவதாகவும், கொழும்பு துறைமுகத்தில் உள்ள JCT முனையத்தில் பணிபுரியும் ஒரு சராசரி ஊழியர் மாதத்திற்கு 600 முதல் 700 மணிநேரம் வரை கூடுதல் நேரம் வேலை செய்வதாகவும் நிர்வாக இயக்குநர் மேலும் தெரிவித்துள்ளார்.