தேர்தல் – வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பம்

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை இதனை அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை
25 மாவட்டங்களிலும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மொத்தம் 2,900 குழுக்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தன, அவற்றில் 2,260 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவை.

எவ்வாறாயினும், இந்தமுறை சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version