யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து விபத்து – பலர் காயம்

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இன்று (15) காலை 7.15 மணியளவில் குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. 

யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

பேருந்தில் 30 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த பேருந்தின் பிரேக் செயல் இழந்தமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Exit mobile version