சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 பேரும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 19 திகதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.
வெறும் 8 நாள் பயணமாக சென்றவர்கள் விண்கலம் செயலிழந்ததால் 286 நாட்கள் அங்கேயே இருந்தனர். அதாவது, திட்டமிட்டதை விட கூடுதலாக 278 நாட்கள் அவர்கள் விண்வெளியில் இருந்தனர்.

இதனிடையே விண்வெளியில் கூடுதல் காலம் இருந்ததற்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு நாள் ஒன்று 5 டொலர்கள் சிறப்பு சம்பளமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அதாவது அவர்களின் ஆண்டு வருமானமான 1,52,258 டொலர்களுடன் கூடுதலாக 1,430 டொலர்கள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டள்ளது.