ஷ்ரேயாஸ் ஐயர் இணைக்கப்படாமைக்கு அசாருதீன் கவலை

ஆசிய கிண்ணத்திற்கான இந்திய குழாமில் ஷ்ரேயாஸ் ஐயர் இணைக்கப்படாமை தொடர்பில் அந்த அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அசாருதீன் தமது அதிருப்தியை வௌியிட்டுள்ளார். 

15 பேர் கொண்ட ஆசிய கிண்ணத்திற்கான இந்திய குழாம் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

சூரிய குமார் தலைமையிலான இந்திய குழாமில் சுப்மன் கில்லும், இடம்பெற்றிருந்தார். 

இந்திய அணியின் எதிர்கால தலைவராக அவரை நியமிக்கும் நோக்கில் இருபதுக்கு 20 தொடருக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

ஆசிய கிண்ணத் தொடரில் உப தலைவராகவும் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த வருட ஐ.பி.எல் தொடரில் சிறப்பான திறமையை வௌிகாட்டிய ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை. 

அவரை இந்த தொடரில் தெரிவு செய்யப்படாமை மிகப் பெரிய ஆச்சரியம் அளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அசாருதீன் தமது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version