ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் செர்பியாவை சேர்ந்த முன்னாள் முதல்தர வீரர் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று 2ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

ஜோகோவிச் முதல் சுற்றில் அமெரிக்காவின் லேர்னர் டியனை எதிர்கொண்டார். 

அதில் ஜோகோவிச் 2 மணி 25 நிமிடங்களில் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப் பெற்றார். 

அதேநேரம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பென் ஷெல்டன், டெய்லர் ஃபிரிட்ஸ் (அமெரிக்கா), ஜோர்டன் தாம்சன்(அவுஸ்திரேலியா) ஆகியோர் வெற்றிப் பெற்று 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். 

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் முன்னாள் சம்பியன் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் மற்றும் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்ஸி ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்தனர். 

அதில் முன்னாள் முதல் தர வீரரான மெத்வதேவ் 3-6, 5-7, 7-6 (7-5), 6-0, 4-6 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். 

இந்தப் போட்டியானது 3 மணி 45 நிமிடங்கள் நீண்டதுடன், ஆட்டத்தில் வென்ற பெஞ்சமின் அமெரிக்க பகிரங்க டென்னிஸில் இதுவரை முதல் சுற்றில் தோற்றதில்லை. 

முன்னாள் சம்பியன் 2வது முறையாக முதல் சுற்றுடன் வௌியேறியுள்ளார். 

தோல்வியால் விரக்தியடைந்த மெத்வதேவ் தமது டென்னிஸ் பேட்டை அடித்து உடைத்தார். 

சிறிது நேரம் அமைதியாக சுற்றி பார்த்து விட்டு மீண்டும் பேட்டை அடித்து உடைத்தார். 

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version