No products in the cart.
இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது
இரட்டை கொலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணையை தகுற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று (08) விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பகுதியில் குறித்த 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேநபர்கள் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பின்வரும் ஆதங்கள் மற்றும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட துப்பாக்கிச் சூட்டில் உஷி வகை துப்பாக்கி 09 மிமீ
அளவிலான கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது
09 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கி
09 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கிக்கு பயன்படும் 53 தோட்டாக்கள்
T56 ரக 19 தோட்டாக்கள்
T56 ரக 2 வெற்று தோட்டாக்கள்
ஒரு ஜோடி கைவிலங்கு
300 கிராம் ஹெராயின் என்பனவற்றை தங்காலை குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.