உலகம்

தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு ஓராண்டு சிறை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டுக்களுக்கு ஒருவரும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தாய்லாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தாய்லாந்தின் மிகப்பெரிய பணக்காரரும் அரசியல்கட்சித் தலைவருமான தக்சின் ஷினவத்ரா அந்நாட்டின் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகிறார். 

2001 முதல் 2006 வரை தாய்லாந்து பிரதமராக பதவி வகித்த அவர் 2007ம் ஆண்டு பியூ தாய் எனும் கட்சியைத் துவங்கினார். 

ஆட்சியை இழந்த தக்சின் ஷினவத்ரா மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. 

இதையடுத்து 2009ம் ஆண்டு தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மொண்டெனேகுரோ-வுக்கு தப்பிச் சென்ற ஷினவத்ரா சுமார் 15 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ம் ஆண்டு தாய்லாந்து வந்தார். 

பியூ தாய் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் அவர் மீதான வழக்கில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 

இந்த சிறை தண்டனை தாய்லாந்து மன்னரால் ஒரு வருடமாக குறைக்கப்பட்டது. 

கால் நூற்றாண்டாக தாய்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தி வரும் கோடீஸ்வரரான தக்சின் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே சிறைச்சாலையில் இருந்த நிலையில் வைத்திய சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தண்டனையை அனுபவித்து வந்தார். 

பின்னர், 6 மாதங்களில் விசேட பிணையில் வெளியே வந்த தக்சின் ஷினவத்ரா தாய்லாந்து அரசியலில் மீண்டும் செல்வாக்கு செலுத்தினார். 

இந்த நிலையில் செப்டம்பர் 4 ஆம் திகதி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தாய்லாந்து பாராளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவரது கட்சி தோல்வி அடைந்தது. 

இதனை அடுத்து அவருக்கு எதிரான விசாரணையின் போது ஏற்கனவே வைத்தியசாலையில் இருந்தபடி தண்டனையை அனுபவித்ததால் அது தண்டனையாக கருதப்படாமல் ஓராண்டு தண்டனையை விதிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…