சினிமா

மோகன்லால் கொடுத்த தரமான பதிலடி

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ள ஆதிலா – நூரா இருவரும் தன்பால் ஈர்ப்பாளர்கள். அவர்களுக்கு எதிராக சக போட்டியாளரான லட்சுமி தெரிவித்த அவதூறான கருத்துக்கு அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மோகன்லால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யாரை வீட்டுக்குள் சேர்க்கத் தகுதியில்லாதவர்கள் என்று குறிப்பிட்டீர்கள் என்றும், இதற்கு லட்சுமி பதிலளித்தே ஆக வேண்டும் என்றும் மோகன்லால் கூறினார். இவ்வளவு தீவிரமான ஒரு விஷயம் நடந்தும் வீட்டில் உள்ள மற்றவர்கள் யாரும் அதற்குக் குரல் கொடுக்கவில்லை என்றும் மோகன்லால் குற்றம் சாட்டினார். 

வாராந்திர டாஸ்க்கின் போதுதான் லட்சுமி இதுபோன்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதன் வீடியோவைக் காட்டிய பிறகுதான் மோகன்லால் லட்சுமியிடம் கேள்வி எழுப்பினார். “நீங்கள் (லட்சுமி) கண்ணியமாகவா பேசினீர்கள்? யார் வீட்டுக்குள் சேர்க்கத் தகுதியில்லாதவர்கள்? சமூகத்தில் மதிப்பற்றவர்கள் யார்? யாரைக் குறிப்பிட்டீர்கள்? எங்களுக்கு எல்லோரும் ஒன்றுதான். இதைக் குறிப்பிட்டு எங்களுக்கு நிறைய மெயில்களும் மெசேஜ்களும் வந்தன. பதில் சொல்லியே ஆக வேண்டும். உங்கள் வீட்டுக்குள் சேர்க்கத் தகுதியில்லாதவர்கள் யார்? நீங்கள் சொன்னது சரியான விஷயமா? உங்களுக்கு இங்கே யார்யார் இருக்கிறார்கள் என்று தெரியும். விருப்பம் இல்லையென்றால் இங்கே வரக்கூடாது. அது மிகவும் தவறான கருத்து, யாரைக் குறிப்பிட்டுச் சொன்னீர்கள்?” என்று ஆக்ரோஷமாக மோகன்லால் கேட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், “அங்கிருந்த யாரும் குரல் கொடுக்கவில்லை, அதுவும் மிகவும் மோசமாகத் தோன்றியது. தேவையில்லாத விஷயங்களுக்குப் பேசுவார்கள். இந்த விஷயத்தில் யாரும் குரல் கொடுக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்” என்றும் மோகன்லால் கூறுகிறார். மஸ்தானியும் ஆதிலா – நூரா ஜோடிக்கு எதிராகப் பேசியிருந்தார். அதையும் மோகன்லால் கேள்விக்குட்படுத்தினார். 

“தன்பால் ஜோடிகளின் உறவை இயல்பாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் கருத்து வேறுபாடு உள்ளது. அதைத்தான் நான் சொன்னேன்” என்று லட்சுமி மோகன்லாலுக்குப் பதிலளித்தார். “அவர்கள் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன? அவர்கள் வேலை செய்து வாழ்பவர்கள் அல்லவா? உங்கள் செலவிலா வாழ்கிறார்கள்? நான் என் வீட்டுக்குள் அவர்களைச் சேர்ப்பேனே. அவர்கள் என் வீட்டுக்கு வரட்டும். நீங்கள் எந்தச் சமூகத்தில் வாழ்கிறீர்கள்? நீங்கள் வெளியூர்களில் எல்லாம் வாழ்ந்தவர் அல்லவா? எங்களுக்கு யாருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லையே? எவ்வளவு மோசமாகப் பேசியிருக்கிறீர்கள்” என்று லட்சுமியிடம் மோகன்லால் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து, மஸ்தானி தங்களைப் பற்றிக் கூறிய விஷயங்களையும் ஆதிலா குறிப்பிட்டிருந்தார். “மஸ்தானியும் இதேபோல் சொல்லியிருந்தார். என் குடும்பத்தில் யாராவது இப்படி இருந்தால் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவேன் என்று. இங்கு இதுபற்றி ஒரு விவாதம் நடந்தது. எங்களைப் போன்ற ஒருவர் உங்கள் குடும்பத்தில் இருந்தால் கொன்று விடுவீர்களா என்று அன்று நான் கேட்டிருந்தேன்” என்றும் ஆதிலா கூறினார். “இந்த உறவை இயல்பாக்குவதில் எனக்கும் விருப்பமில்லை” என்று மஸ்தானியும் கூறினார். 

“உங்கள் விருப்பம் உங்களுடன் மட்டுமே இருக்கட்டும். உங்கள் வசதிக்காக வாழ மற்றொருவரைத் தூண்டாதீர்கள். நீங்கள் இருவரும் நிகழ்ச்சி தொடங்கி சில நாட்கள் கழித்து வந்தவர்கள். அங்கே யார் யார் இருக்கிறார்கள் என்றும் தெரியும். மற்ற யாருக்கும் பிரச்சினை இல்லையே. உங்களுக்கு மட்டும் என்ன இவ்வளவு பிரச்சினை? அங்கே இருக்க விருப்பம் இல்லையென்றால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிச் செல்லுங்கள். எதற்காக அவர்களைத் தொந்தரவு செய்கிறீர்கள்? மற்றவர்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? இதுபோன்ற கருத்துக்களைக் கவனமாகப் பயன்படுத்தாவிட்டால், மிகப் பெரிய பிரச்சினை ஏற்படும் லட்சுமி. எங்கள் நிகழ்ச்சியின் அடித்தளத்தையே நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள். உலகத்தில் உள்ள அனைவரும் அங்கீகரித்த விஷயம் அது. அவர்களுக்கு என்ன குறை?” என்று மோகன்லால் கேட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்த லட்சுமி “நான் சமூகத்திற்கு எதிராகப் பேசவில்லை. நான் ஒரு தாய். என் மகனும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறான். அவன் இதைப் பார்த்துத் தவறாக வழிநடத்தப்படுவான்” என்று கூறுகிறார். “எல்லோருக்கும் அவரவர் கருத்துக்கள் இருக்கும். நல்ல கல்வி கற்றவர்கள் அல்லவா? எனக்குப் பேசவே வெட்கமாக இருக்கிறது. விப்ரோவில் வேலை செய்து சம்பளத்துடன் வாழ்பவர்கள் ஆதிலாவும் நூராவும். இவ்வளவு கஷ்டப்பட்டு எதற்காக இங்கே இருக்கிறீர்கள்? மற்றவர்களின் தலையில் ஏறி அமர்ந்து வாழாதீர்கள். அது சரியான விஷயமல்ல” என்றும் மோகன்லால் கூறினார்.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…