No products in the cart.
9.9 Birthday Cart Sale ஊக்குவிப்புடன் 9 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் Daraz Sri Lanka மிகக் குறைந்த விலைகளுடன், அன்பளிப்பாகவே பெற்றுக்கொள்ளும் உணர்வை ஏற்படுத்துகிறது
ஒன்பது ஆண்டுகளை எட்டியுள்ள Daraz Sri Lanka அதன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகச் சிறப்பாக கொண்டாடுகிறது. இச்சாதனை இலக்கினைக் குறிக்கும் வகையில், செப்டெம்பர் 9 முதல் 20 வரை இடம்பெறுகின்ற, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 9.9 Birthday Cart Sale ஊக்குவிப்புடன் கொண்டாட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு நாடெங்கிலுமுள்ள கொள்வனவாளர்களுக்கு Daraz அழைப்பு விடுக்கின்றது. கொள்வனவு அனுபவத்தை வெறுமனே ஒரு பரிவர்த்தனை என்பதற்கு அப்பால் ஒரு கொண்டாட்டமாகவே உணரச் செய்யும் நோக்குடன் ஒப்பற்ற சலுகைகள், வியப்பூட்டும் வழங்கல்கள், மற்றும் ஆச்சரியங்களுடன் விநோதம் நிரம்பிய துடிதுடிப்பான அனுபவத்திற்கு இவ்விற்பனை உறுதியளிக்கின்றது.
ரூபா 20 மில்லியன் மதிப்பிற்கும் மேற்பட்ட வவுச்சர்கள், பல்லாயிரக்கணக்கான பொருட்களுக்கு இலவச விநியோகம், பலதரப்பட்ட தயாரிப்புக்கள் மத்தியில் 85% வரையான தள்ளுபடிகள் என அனைத்தையும் ஒன்றாக வழங்கும் 9.9 Birthday Cart Sale, இந்த ஆண்டில் இடம்பெறும் மிகவும் வியப்பூட்டும் ஒன்லைன் கொண்டாட்ட விருந்துகளில் ஒன்றாக மாறவுள்ளது. நவநாகரிகம், இலத்திரனியல் சாதனங்கள், தனிநபர் பராமரிப்பு, வீட்டுப்பாவனை சாதனங்கள், மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் என இது வரை பெற்றிராத அளவுக்கு Daraz வழங்கும் மிகச் சிறந்த சலுகைகள் பலவற்றை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
“மிகக் குறைந்த விலைகள், அன்பளிப்பு உணர்வை ஏற்படுத்துகின்றன” (Prices So Low, It Feels Like a Gift) என்ற கருப்பொருளையொட்டியதாக இந்த ஆண்டு பிரச்சாரம் இடம்பெறுவதுடன், பிறந்ததினங்களின் போது அடுத்தவர்களுக்கு கொடுப்பதன் மூலமாகக் கொண்டாடுகின்ற உற்சாக உணர்வை வசப்படுத்துகிறது. வழக்கமான கொள்வனவு அனுபவத்தை, கொண்டாட்ட அனுபவமாக மாற்றுகின்ற Daraz, வாடிக்கையாளர்கள் இனியும் தாமதிக்காது தமது கூடைகளை நிரப்ப ஆரம்பித்து, தாம் வாங்க நினைக்கும் பொருட்களை எதிர்பாராத விலைகளில் பெற்றுக்கொள்ளும் ஆனந்தத்தை அனுபவிக்குமாறு அவர்களை ஊக்குவிக்கின்றது.
அனைத்து வகையான பொருட்களை வாங்கும் கொள்வனவாளர்களுக்கும் விசேட தருணங்களைத் தோற்றுவிக்கும் வகையில் 9.9 Birthday Cart Sale ஆனது பலவகைப்பட்ட சலுகைகளால் நிரம்பியுள்ளது. ரூபா 99, ரூபா 999, மற்றும் ரூபா 9,999 என கண்ணைக்கவரும் விலைப்புள்ளிகள் முதல், மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் கிடைக்கும் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் (Buy1Get1 Free) சலுகைகள், Bolt Gear, Spa Ceylon, Cetaphil, Amante, Spring & Summer, Ancient Nutra மற்றும் Global Diapers உள்ளிட்ட உச்ச வர்த்தகநாமங்களுக்கு நேரடி 50% தள்ளுபடி, மற்றும் Moose க்கு நேரடி 45% தள்ளுபடி என தினந்தோறும் மதிப்பையும், வியப்பையும் ஆராய்ந்து அனுபவிப்பதற்கான எண்ணுக்கணக்கற்ற வழிமுறைகள் உள்ளன. நீங்கள் முதல்முறையாக Daraz மூலமாக பொருட்களை வாங்குபவரானாலும் சரி அல்லது ஆரம்பத்திலிருந்து வாங்கி வருபவரானாலும் சரி, அனைவரும் இக்கொண்டாட்டத்தில் இணைந்து மகிழும் அனுபவத்தை வழங்கும் வகையில் இவ்விற்பனை ஊக்குவிப்பு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் மூலமாக வாடிக்கையாளர்கள் உச்சப் பயனைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக, இலத்திரனியல் சாதனங்கள் மத்தியில் தனது மிகச் சிறந்த விலை உத்தரவாதத்தையும் (Best Price Guarantee) இங்கு Daraz அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபலமான தொழில்நுட்ப மற்றும் சாதனங்களுக்கு கிடைக்கப்பெறும் ஆகக் குறைந்த விலைகளை தாம் பெற்றுக்கொள்கின்றனர் என்ற நம்பிக்கையுடனும், அறிவுடனும் கொள்வனவாளர்கள் அவற்றை வாங்குவதற்கு இது வழிவகுக்கின்றது. வெறுமனே தள்ளுபடிகள் என்பதற்கு அப்பால், இப்பிரசாரம் இடம்பெறும் காலப்பகுதியில் விளையாட்டுக்கள், இலவச அன்பளிப்புக்கள், மற்றும் வியப்பூட்டும் ப்ளாஷ் (flash) விற்பனைகள் மூலம் ஒட்டுமொத்த அனுபவமும் மேம்படுத்தப்படுகின்றது. இவை அனைத்தையும் இன்னும் வெகுமதியளிப்பவையாக மாற்றும் வகையில், முன்னணி வங்கிகள் மற்றும் கொடுப்பனவுக் கூட்டாளர்களுடன் Daraz கொண்டுள்ள பிரத்தியேக கூட்டாண்மைகள் மூலமாக 15மூ வரையான தள்ளுபடிகள் கிடைக்கின்றன. கொமர்ஷல் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமெக்ஸ், சம்பத் வங்கி, LOLC Finance ஆகியவற்றின் அட்டைகளையும், KoKo கொடுப்பனவு வழங்குனர் சேவையையும் உபயோகிக்கின்ற வாடிக்கையாளர்கள் கூடுதல் சேமிப்புக்கள், இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள், மற்றும் எளிதாக கொள்வனவு நடவடிக்கைகளை முடித்துக் கொள்கின்ற அனுபவங்களை எதிர்பார்க்க முடியும். இணைய வழி கொள்வனவு அனைவருக்கும் மேலும் அணுகக்கூடியதாகவும், கட்டுபடியானதாகவும், மற்றும் மகிழ்வளிப்பதாகவும் அமையும் வகையில் அதனை மாற்றியமைப்பதற்கு Daraz தற்போது மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளின் ஒரு அங்கமாக இக்கூட்டாண்மைகள் காணப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் இது வரையான பயணம் குறித்து, Daraz Sri Lanka பிரதம வர்த்தக அதிகாரி ப்ரவீன் ருக்ஷான் அவர்கள் பிரதிபலிக்கையில், நாட்டில் ஒன்பது ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளமை, மிக முக்கியமான மற்றும் திருப்தியுணர்வை ஏற்படுத்தும் ஒரு சாதனை இலக்காகும். நிறுவனத்தின் பயணத்தை சாத்தியமாக்கிய வாடிக்கையாளர்களுடன் இணைந்து கொண்டாடும் ஒரு முயற்சியே 9.9 Birthday Cart Sale எனவும் அவர் குறிப்பிட்டார். ஆண்டுதோறும் இந்நிகழ்வானது குதூகலம், மதிப்பு, மற்றும் பிணைப்பு என ஒவ்வொரு சலுகையும் வியப்பினை வெளிக்கொண்டு வரும் நன்றியின் வெளிப்பாட்டை வழங்கும் கொண்டாட்டத்தைக் குறித்து நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
9.9 Birthday Cart Sale நிகழ்வானது செப்டெம்பர் 9 முதல் பிரத்தியேகமாக Daraz app மற்றும் அதன் இணையத்தின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மற்றையவர்களை முந்திக்கொண்டு, தாமதிக்காது இப்போதே இவற்றை ஆராய்ந்து தமக்கு விருப்பமானவற்றை தமது கொள்வனவுக் கூடைகளில் சேர்ப்பிக்கத் தொடங்குமாறு வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். ஏராளமான சலுகைகள் மற்றும் வியப்புக்கள் அடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு பிறந்ததினக் கொண்டாட்டமானது மாபெரும் நிகழ்வுக்கு உறுதியளிக்கின்றது.
கொண்டாட்டத்தில் இணைந்து, கிடைக்கபெறும் சலுகைகளின் முழுமையான விபரங்களை ஆராய்வதற்கு தயவு செய்து www.daraz.lk க்குச் செல்லுங்கள்.
Daraz குழுமம் குறித்த விபரங்கள்
2015 ல் ஸ்தாபிக்கப்பட்ட Daraz, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் முன்னிலை வகிக்கும் e-commerce தளமாகத் திகழ்ந்து வருகின்றது. 500 மில்லியன் சனத்தொகையுடன், மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற பிராந்தியத்தை இலக்கு வைத்து, அதிநவீன சந்தைப்பரப்பு தொழில்நுட்பத்துடன், விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் என இரு தரப்பினருக்கும் வலுவூட்டுகின்றது. e-commerce, விநியோக வழங்கல் ஏற்பாடு, கொடுப்பனவு மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பொன்றைக் கட்டியெழுப்பி, ஈர்க்கின்ற, தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட கொள்வனவு அனுபவத்தை வழங்கி, வர்த்தகத்தின் ஆற்றல் மூலமாக தெற்காசிய சமூகங்களை மேம்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கம். மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள தயவு செய்து www.daraz.com என்ற இணையத்தளத்தை நாடுங்கள் அல்லது நிறுவனம் குறித்த தகவல் விபரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள LinkedIn (www.linkedin.com/company/daraz/) மூலமாக Daraz உடன் இணைப்பில் இருங்கள்.