No products in the cart.
தரவரிசையில் முன்னேறிய பெத்தும் நிஸ்ஸங்க
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை வௌியிட்டுள்ள புதிய தரப்படுத்தலின் படி, இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க ஒரு இடம் முன்னேறி 6ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆசிய கிண்ணத் தொடரில் ஹொங்கொங் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் அவர் அரைச்சதம் கடந்த நிலையில் தரவரிசையில் அவருக்கு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் அபிஷேக் சர்மா 884 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
அத்துடன் இந்திய அணியின் திலக் வர்மா 2 இடங்கள் பின்தள்ளப்பட்டு 4 ஆம் இடத்திலும், சூர்யகுமார் யாதவ் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 7ஆம் இடத்திலும் உள்ளனர்.
இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் தொடர்ந்தும் 9 வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.