No products in the cart.
குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 18 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 132 ஓட்டங்களை எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.
இதையடுத்து, குஜராத் வெற்றிபெற ஒரு ஓவரில் 15 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குஜராத் கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
2 ஆவது இடத்தில் ஆர்.சி.பி.யும், 3 ஆவது இடத்தில் பஞ்சாப் கிங்சும், 4 ஆவது இடத்தை மும்பை இந்தியன்சும், 5 ஆவது இடத்தை டெல்லியும், 6 ஆவது இடத்தை கொல்கத்தாவும், 7 ஆவது இடத்தை லக்னோவும் பிடித்துள்ளன.