இலங்கை

ஏழு இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 7 இராமேஸ்வரம் மீனவர்களையும் நளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் (ஓகஸ்ட்) 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் இன்று (17) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்னர். 

இதன்போதே அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…