இலங்கை

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்றிருந்த 22 பிக்குகள், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நாட்டிற்குத் திரும்பிய போது, அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் இருந்து 112 கிலோகிராம் ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘அமிதானந்த’ என்ற பிக்கு ஒருவரே இந்த சட்டவிரோத செயலை வழிநடத்தியுள்ளமை தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து, அமிதானந்த என்ற பிக்குவும் கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.

What's your reaction?

Related Posts

705 வைத்தியர்கள் தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்

சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகளிடமிருந்து, அரசாங்கத்துக்கு ரூபாய் 1,277 மில்லியனுக்கும் அதிகமான பணம் நிலுவையில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. பதவிகளை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து, 2024 ஆம் ஆண்டு…