உலகம்

காசா மீது தாக்குதலுக்கு எதிராக இத்தாலியில் ஆவேசமான எதிர்ப்பு

காசா பகுதி மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் காரணமாகப் பல துறைமுகங்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜெனோவா மற்றும் நேபள்ஸ் போன்ற முக்கிய துறைமுகங்களில் பலஸ்தீன ஆதரவாளர்கள் துறைமுக வாயில்களை அடைத்து, போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த போராட்டங்கள் இத்தாலியின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

காசா மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தங்கள் போராட்டங்களைக் கைவிடப்போவதில்லை என போராட்டக்காரர்கள் குறிப்பிடுகின்றனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…