உலகம்

எண்ணெய் கொள்முதல் விவகாரம் ; அமெரிக்காவிடம் இந்தியா விடுத்துள்ள கோரிக்கை

ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளிடம் எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், ஈரான் மற்றும் வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது.

அண்மையில், அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ஈரான் மற்றும் வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி கோரியதாக அதிகாரி ஒருவர் கூறியதாக ப்ளும்பெர்க்கில் குறிப்பிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ரஷியா, ஈரான், வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அனைத்து முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் உலகளாவிய விலையில் அதிகரிப்புக்கும் வழிவகுக்கும் என்று இந்திய பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…