இலங்கை

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுறுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

ஜனாதிபதி நேற்று இரவு (25) ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி, செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் வௌிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் கலந்து கொள்கிறார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…