இலங்கை

மியன்மாருக்கு செல்லும் இலங்கை மருத்துவக் குழு

மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக இலங்கை மருத்துவக்குழு ஒன்றை  மியன்மாருக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மியன்மார் அரசாங்கம் தேவையான அனுமதியை வழங்கியவுடன், அனர்த்த மீட்புப் பணிகளில் அனுபவமுள்ள விசேட மருத்துவர்கள் மற்றும்  தாதியர்கள் உள்ளடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மியன்மாருக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தேவையான பொருட்களை வழங்க அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மேலதிகமாக  விசேட மருத்துவக் குழு ஒன்றை  நாங்கள் நியமித்துள்ளோம் எனவும் சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…