இந்தியா

21 ஆம் நூற்​றாண்டு இந்​தி​யா, ஆசி​யான் அமைப்​பின் நூற்​றாண்டு – பிரதமர் மோடி

இந்​தி​யா, ஆசி​யான் நாடு​கள் இடையே ஆழமான நட்​புறவு நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் ஆரம்பமான ஆசி​யான் உச்சி மாநாட்டில் காணொலி ஊடாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆசி​யான் அமைப்​பில் மலேசி​யா, இந்​தோ​னேசி​யா, சிங்​கப்​பூர் உள்​ளிட்ட 10 நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன.

இந்த அமைப்​பின் 03 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் நேற்று ஆரம்பமான நிலையில்  இதன் ஒரு பகு​தி​யாக ஆசி​யான் – இந்​தியா உச்சி மாநாடு நேற்று நடை​பெற்​றது.

இதன்போது காணொலி மூலம் இணைந்த இந்திய பிரதமர் மோடி உலக மக்​கள் தொகை​யில் நான்​கில் ஒரு பகுதி மக்​கள் இந்​தி​யா, ஆசி​யான் நாடு​களில் வசிப்பதாக கூறினார்.

வணி​கரீ​தி​யாக மட்​டுமின்றி கலாச்​சா​ர ரீ​தி​யாக​வும் இணைந்​திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

21 ஆம் நூற்​றாண்டு இந்​தி​யா, ஆசி​யான் அமைப்​பின் நூற்​றாண்டு எனவும்  2045 ஆம் ஆண்​டுக்​கான ஆசி​யான் அமைப்​பின் தொலைநோக்கு  திட்​டங்​கள் நிச்​சய​மாக நிறைவேறும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

தமிழகத்தை ஆளப்போவது யார்? கணிப்புகள் காட்டும் திருப்பம் – மே 04   ஐ நோக்கிய மக்களின் பார்வை

வரலாற்றுப் பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.…