கிரிக்கட்விளையாட்டு

இலங்கைக்கு சிம்பாப்வே நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. 

ராவல்பிண்டியில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பில் Brian Bennett அதிகபட்சமாக 49 ஓட்டங்களையும், அணித்தலைவர் Sikandar Raza 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Wanindu Hasaranga 03 விக்கெட்டுக்களையும், Eshan Malinga 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதன்படி இலங்கை அணிக்கு 163 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

WTC 2025 இறுதிப்போட்டி – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது, இதில் அவுஸ்திரேலியா மற்றும் தென்…