விளையாட்டு

சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (11) ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள்முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43 ஓட்டங்களை பெற்றுள்ளது. அணி தலைவர் பவுமா 3 ஓட்டங்களுடனும், பெடிங்ஹாம் 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் மிக முக்கியமான சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினை ஸ்டீவ் ஸ்மித் முந்தியுள்ளார்.

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சச்சின் 6 அரைசதங்கள் அடித்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 7 அரைசதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

அதே சமயம் இப்பட்டியலில் 10 அரைசதங்களுடன் விராட் கோலி உள்ளார்.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…