இலங்கை

மேல் மாகாண கழிவுகளை 3 வாரங்களில் அகற்ற வேண்டும்

மேல் மாகாண கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் இன்று (04) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது, அனர்த்த நிலைமை காரணமாக குவிந்துள்ள கழிவுகளை முறையான வகையில் அகற்றி, துப்புரவு பணிகளை மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். 

இத்திட்டத்தின் கீழ் சேரும் கழிவுகளை விரைவாக அகற்றுவதற்காக காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கெரவலப்பிட்டியவில் உள்ள காணியிலிருந்து ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதால், அதற்கமைய தற்போது சேரும் கழிவுகளை எவ்வித சிக்கலுமின்றி அகற்ற முடியும் என குழு தீர்மானித்தது. 

அக்காணியில் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும் அங்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…