இலங்கை

மலையக மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜீவன் கோரிக்கை

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார். 

கொட்டகலை, லொகி தோட்டப் பகுதியில் நேற்று (08) வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் மற்றும் பலரும் கலந்துகொண்டனர். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், 

“ஒவ்வொரு குடும்பங்களுக்கும் சொந்தக் காணிகள் இருக்கும் பட்சத்தில் எமது வாழ்க்கைத்தரம் உயர்வடையும். தேர்தல் காலங்களில் நாம் சலுகைகளை நம்பிப் பின்னால் சென்றுகொண்டிருக்கின்றோம். அனைவருக்கும் வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்வதென்பது சாத்தியமற்ற விடயம்” எனவும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…