இலங்கை

கயந்த கருணாதிலக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு இன்று (11) முற்பகல் அழைக்கப்பட்டிருந்தார். 

முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்காக இராஜகிரிய பகுதியில் ஒரு கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமையவே கயந்த கருணாதிலக்க இவ்வாறு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தச் சம்பவம் தொடர்பான காலத்தில் அவர் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார். 

அதற்கமைய இன்று காலை 9 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையானார். 

அங்கு அவர் சுமார் 2 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஆணைக்குழுவில் இருந்து வௌியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…