இலங்கை

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முன்னாள் சபாநாயகர் நேற்று (11) பயணித்த ஜீப் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது. 

சப்புகஸ்கந்த தெனிமுல்ல பகுதியில் இந்த விபத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

காரில் பயணித்த 25 வயது பெண், அவரது 6 மாத குழந்தை மற்றும் அவரது 55 வயது பாட்டி ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

குறித்த குழந்தை சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…