இலங்கை

கொழும்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (20) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான 8 மணித்தியாலங்களுக்கு இந்த நீர்விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அந்த சபை அறிவித்துள்ளது. 

இதற்கமைய கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளிலும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத் தடை அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…