இலங்கை

விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இரண்டு பெண்கள் உட்பட  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​​பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமை சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பேங்காக்கில் போதைப்பொருளை பெற்று, இந்தியாவின் மும்பைக்குச் சென்று, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (29)  வந்தடைந்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்த பறிமுதல் செய்யப்பட்ட குஷ்  போதைப்பொருளின் நிறை 20 கிலோ மற்றும் 684 கிராம்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள்  பொரளை ,ஒருகொடவத்தை மற்றும் தெமட்டகொட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…