இலங்கை

துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது

அம்பலாங்கொடை – வதுகெதர பகுதியில் உள்ள வீடொன்றின் அறைக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ வகை கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அக்மீமன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வதுகெதர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இந்த ஆயுதத்தை மற்றொரு தரப்பினருக்கு விற்பனை செய்வதற்குத் தயாராக இருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:newssrilanka

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…