இலங்கை

அரசாங்கத்தின் மீது சஜித் கடும் தாக்கு!

6 ஆம் தர பாடத்திட்டச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுக்க அரசாங்கம் தவறியுள்ளதால், இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் (26) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது: 

6 ஆம் தரத்திலிருந்து கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என இலட்சக்கணக்கான பெற்றோர்களும் பிள்ளைகளும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 

ஆனால், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இதனை ஒத்திவைத்துள்ளதன் காரணமாக அவர்களின் எதிர்பார்ப்புகள் கானல் நீராக மாறிப்போயுள்ளன. 

சீர்திருத்தங்களை இடைநிறுத்திய பழியை எதிர்க்கட்சியின் மீது சுமத்த அரசாங்கம் முயன்ற போதிலும், உண்மையில் அரசாங்கமே அதனை இடைநிறுத்தியது. 

கல்வித் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் உடனடியாகக் கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன். 

பாடத்திட்டங்களில் உள்ள தேவையற்ற மற்றும் ஆபாசமான விடயங்களை நீக்கிவிட்டு, சரியாகவும் விரைந்தும் இந்த வருடமே கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும். 

கல்வித் துறையில் முற்போக்காகச் செயற்படும் பல நிபுணர்கள் உள்ளனர். அவர்களுடன் ஆலோசித்து முற்போக்கான முடிவுகளை எடுக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன். 

கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக இந்த அரசாங்கம் முறையான கலந்துரையாடலை முன்னெடுத்தால், எதிர்க்கட்சி என்ற ரீதியில் எமது கருத்துக்களை முன்வைக்க நாம் தயாராக உள்ளோம். 

இந்த சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும் நாம் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…