இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை!

நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார  அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மார்பக புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19,000 பெண்கள்  உயிரிழப்பதாக சுகாதாரத் தரவுகள் குறிப்பிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த  சிறப்புத் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…