இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 422 சாரதிகள் கைது

பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நாளாந்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைய, நேற்று (06) மாத்திரம் 27,430 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, இந்தச் சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்தின் பேரில் 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 309 பேரும் மற்றும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 156 பேரும் இந்தச் சோதனைகளின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இச்சோதனை நடவடிக்கைகளின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 422 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அஜாக்கிரதையாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 79 சாரதிகள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,826 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…