இலங்கை

இலங்கை – ஆஸி போட்டியின் டிக்கட்டுக்கள் விற்றுத்தீர்ந்தன!

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் எதிர்வரும் (16) திங்கட்கிழமை இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியின் அனைத்து டிக்கட்டுக்களும் தற்போது விற்றுத் தீர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள் டிக்கட்டை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி இரவு 7 மணிக்கு பல்லேகலை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

குறித்த மைதானத்தில் 35,000 ரசிகர்கள் இருந்து போட்டியை பார்வையிடுவதற்கான வசதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…