உலகம்

ஜெனிவாவில் நாளை இரண்டாம் கட்டப் பேச்சு: அமெரிக்கா – ஈரான் அணுசக்தி விவகாரத்தில் முக்கிய நகர்வு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டாம் கட்ட அணுசக்தி பேச்சுவார்த்தை ஜெனிவாவில் தொடங்குகிறது. இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாகப் பயனளிக்கும் வகையில் புதிய உடன்படிக்கையை எட்ட விரும்புவதாக ஈரான் தூதரக அதிகாரி ஹமீத் கன்பாரி (Hamid Ghanbari) தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, எரிசக்தி, சுரங்கம் மற்றும் விமானக் கொள்முதல் போன்ற துறைகளில் அமெரிக்கா முதலீடு செய்து லாபம் ஈட்ட ஈரான் தற்போது வழிவகை செய்துள்ளது.

இதற்கிடையில், ஸ்லோவாக்கியாவில் (Slovakia) பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “ராஜதந்திர ரீதியான தீர்வை ஜனாதிபதி ட்ரம்ப் விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

அதேநேரம், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கைக்குத் தயார்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், டொனால்ட் ட்ரம்ப்பின் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) பங்கேற்கின்றனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…