No products in the cart.
பிரதமர் மோடி முதன்முறையாக இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் முதன்முறையாக, எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது.
குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ‘சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை’ விரைவுபடுத்துவது குறித்தும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘காசா அமைதித் திட்டம்’ குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில், பிரதமருடன் அமைச்சர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
















