No products in the cart.
கனடாவில் அமெரிக்க பொருட்களுக்கு புறக்கணிப்பு
அமெரிக்க பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்த்து கனடியர்கள் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதை தவிர்த்து வருவதுடன், அமெரிக்கப் பயணங்களையும் குறைத்துவரும் நிலை தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
இந்த புறக்கணிப்பு முயற்சியில் செல்லப்பிராணி உரிமையாளர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
கியூபெக் மற்றும் ஒன்ராரியோ மாகாணங்களைச் சேர்ந்த நாய்களை நேசிப்பவர்கள் நகரில் உள்ளக்கு பயிற்சி வகுப்புகளுக்காக மற்றும் போட்டிகளுக்காக வருவார்கள்.
ஆனால் இப்போது, அங்கு கனடிய தயாரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன், அமெரிக்கப் பொருட்களை முற்றிலும் தவிர்க்கும் புதிய நடைமுறை எடுக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கான அனைத்தும் கனடிய தயாரிப்புகளாக மாற்றினோம் என தெரிவிக்கின்றனர்.
ஆரம்பத்தில் பாதி மாற்றம் செய்தோம். இன்று நாங்கள் 100% கனடிய தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்கிறோம்,” குறிப்பிடுகின்றனர்.
மிகவும் சுலபமாகவும் சந்தோஷமாகவும் நாங்கள் இதைச் செய்தோம் எனவும் நிறைய நல்ல கனடிய நிறுவனங்களை நாங்கள் கண்டுபிடித்தோம், அதை நாங்கள் பெருமையாகப் பயன்படுத்துகிறோம்,” என கனடிய நாய் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வாடிக்கையாளர்கள் அதிக விலையை செலுத்துவதில் தயங்கவில்லை; அவர்களுக்கு உள்ளூர் தயாரிப்புகள் என்றால் அதற்கு மேலானது எதுவும் இல்லை என்று அவர்களே உணர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.