No products in the cart.
பனாமாவில் காணாமல் போன கனடிய குடும்பம்; சிசு சடலமாக மீட்பு
பனாமாவில் கனடாவின் ஹமில்டனைச் சேர்ந்த குடும்பம் ஒன்றை காணவில்லை எனவும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிசுவின் தந்தையையும் சகோதாரியையும் தொடர்ந்தும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹமில்டனைச் சேர்ந்த குசேன் இக்பால் அவரது ஏழு மாத மகன் மற்றும் 2 வயது மகள் ஆகியோருடன் மத்திய அமெரிக்க நாடான பனாமாவிற்கு சென்றிருந்தார்.
சிசுவின் சடலம்
பின்னர் இந்த மூவரும் காணாமல் போனதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பனாமா அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர தேடுதல்களின் போது பனாமாவின் சான்குயினோலா என்னும் நதிக்கரையில் சிசுவின் சடலம் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போன நபர் உளநலப் பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டிருந்தார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் எதனால் குழந்தைகளுடன் இவ்வாறு சென்றார் என்பது புரியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன நபரின் மனைவி பனாமாவில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.