இலங்கை

யாழில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட கரு தொடர்பில் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக நேற்று (1) பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6 – 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கரு தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அவ்விடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பெண், எங்கேனும் சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட பின்னர் கரு சிதைவை வீதியில் வீசி சென்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற யாழ்ப்பாண நீதவான் பார்வையிட்டிருந்தார். 

யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…