இலங்கை

பல மாவட்டங்களில் வெப்பமான வானிலை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, நாளை (11) வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது ‘அவதானம் செலுத்த வேண்டிய’ மட்டத்திலிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, இது குறித்து விழிப்புடன் இருக்குமாறும், மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…