No products in the cart.
மஹிந்தானந்த மற்றும் நளினின் மேன்முறையீட்டு மனுக்கள் நாளை வரை ஒத்திவைப்பு
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தமது தண்டனைகளுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை நாளை (11) வரை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று (10) பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, பிரதிவாதியான மஹிந்தானந்த அளுத்கமகே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் சமர்ப்பணங்கள் இன்று நிறைவு செய்யப்பட்டன.
நாளை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் அதன் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணங்களை முன்வைக்க உள்ளனர்.
















